பகுதி - I
BC | MBC | DNC - மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் பெறுவது எப்படி?
தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள், TAMCO - Scheme..
கடன் உதவித் திட்டங்கள் இதுபோல் நிறைய திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது.
இது போன்ற அரசின் திட்டங்கள் பெரும்பாலும் யாருக்கும் தெரியாமலேயே போய்விடுகிறது.. தேவைப்படுவோருக்கு இந்த தகவல் தேவையான நேரத்தில் சென்றடைவதில்லை.
ஆகவே இந்த பதிவை பார்க்கும் நீங்களும் தேவைப்படுவோருக்கு இந்தத் திட்டத்தை ஷேர் செய்யவும்.
இந்த பதிவின் மூலம் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களை நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மேலும் பல்வேறு திட்டங்கள் நமது இந்த இணையதளத்தில் உள்ளது நீங்கள் பார்த்து பயன் பெறலாம்.
தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள்.
1. பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம்.
2. இலவச கல்வி உதவித்தொகைத்திட்டம்
முதலாவது திட்டத்தை பற்றி விரிவாக பார்போம்...👀👀
1. பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம்.
திட்ட குறிப்பு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு பட்டயப் படிப்பு தொழில் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் சீர்மரபினர் நல்ல மாணவ-மாணவியர்கள் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவியர்கள் ஆகியோருக்கு இந்த திட்டம் பொருந்தும்.
இந்த திட்டத்தை பெறுவதற்கான நிபந்தனைகள்
பெற்றோர்களது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திட்டத்தின் பயன்கள்.
- கற்பிப்பு கட்டணம் மற்றும் சிறப்பு கட்டணம் - அரசு கல்வி நிறுவனங்களுக்கு நிர்ணயித்துள்ளவாறு முழுமையாக ஈடு செய்யப்படுகிறது
- தேர்வு கட்டணம் - முழுமையாக ஈடு செய்யப்படுகிறது
- புத்தக கட்டணம் - கல்வி உதவித்தொகை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு வழங்கப்படுகிறது
- மேலும் கல்வி நிலையங்களே நடத்தும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மேற்படி கல்வி உதவித் தொகையுடன் உண்டி உறையுள் கட்டணம் தொழில்கல்வி மாதம் ஒன்றுக்கு மட்டும் ரூபாய் 350/- வழங்கப்படும்.
- ஐடிஐ அல்லது பட்டயப் படிப்பு மற்றும் முதுகலை மாணவ மாணவியருக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 225/- வீதம் ஆண்டுக்கு 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
முக்கிய குறிப்பு மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் கல்லூரிகளில் கிடைக்கும் அல்லது கீழே உள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இது குறித்த சந்தேகங்களுக்கு மற்றும் விண்ணப்ப படிவங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள லிங்கில் காணலாம்..
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.
Comments
Post a Comment