பகுதி - 2
BC | MBC | DNC - மாணவ மாணவிகளுக்கான இலவச கல்வி உதவித்தொகை திட்டங்கள் பெறுவது எப்படி?
இது போன்ற அரசின் திட்டங்கள் பெரும்பாலும் யாருக்கும் தெரியாமலேயே போய்விடுகிறது.. தேவைப்படுவோருக்கு இந்த தகவல் தேவையான நேரத்தில் சென்றடைவதில்லை.
ஆகவே இந்த பதிவை பார்க்கும் நீங்களும் தேவைப்படுவோருக்கு இந்தத் திட்டத்தை ஷேர் செய்யவும். 🙏🙏🙏🙏
2. இலவச கல்வி உதவி தொகை திட்டம்.
2.1 மூன்று ஆண்டு பட்டப் படிப்புகளுக்கு
திட்ட குறிப்பு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல மாணவியர்கள் இதன் மூலம் பயன் பெறலாம்.👏👏
இந்த திட்டத்தை பெறுவதற்கான நிபந்தனைகள்
நிபந்தனைகள் ஏதும் இல்லை👌👌👌
திட்டத்தின் பயன்கள்.
- சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்ப பெற இயலாத கட்டணம் - அரசு கல்வி நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளவாறு முழுமையாக ஈடு செய்யப்படுகிறது.
- புத்தக கட்டணம் - கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு ஈடு செய்யப்படும்.
- விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உண்டி உறையுள் கட்டணம் - கல்வி நிறுவனங்களுடன் இணைந்து உள்ள விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கு மாதம் ரூபாய் 175 வீதம் 10 மாதங்களுக்கு இந்த உண்டி உரையில் கட்டணம் வழங்கப்படுகிறது.
- பட்டயப்படிப்பு - ரூபாய் 225 வீதம் ஆண்டிற்கு 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது
- தொழில் படிப்பு - மாதம் ஒன்றுக்கு ரூபாய் 350 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
2.2 பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிக்கும் 3 ஆண்டு பட்டயப் படிப்புகளுக்கான இலவச கல்வி உதவித் தொகை திட்டம்.
திட்ட குறிப்பு.அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு பயிலும் பிற்படுத்த வகுப்பைச் சார்ந்த அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் இந்த திட்டத்தை பெற்றுக்கொள்ளலாம்.👏👏
இந்த திட்டத்தை பெறுவதற்கான நிபந்தனைகள்
- பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- குடும்பத்தில் வேறு பட்டைய அல்லது பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது.
திட்டத்தின் பயன்கள்.- சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்ப பெற இயலாத கட்டணம் - அரசு கல்வி நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளவாறு முழுமையாக ஈடு செய்யப்படுகிறது.
- புத்தக கட்டணம் - கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு ஈடு செய்யப்படும்.
- விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உண்டி உறையுள் கட்டணம் - கல்வி நிறுவனங்களுடன் இணைந்து உள்ள விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கு மாதம் ரூபாய் 175 வீதம் 10 மாதங்களுக்கு இந்த உண்டி உரையில் கட்டணம் வழங்கப்படுகிறது.
- பட்டயப்படிப்பு - ரூபாய் 225 வீதம் ஆண்டிற்கு 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது
- தொழில் படிப்பு - மாதம் ஒன்றுக்கு ரூபாய் 350 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
2.3 தொழிற்கல்வி படிப்புகள் மருத்துவம் பொறியியல் விவசாயம் போன்ற படிப்புகளுக்கான இலவச கல்வி உதவித் தொகை திட்டம்
திட்ட குறிப்பு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவியர்கள் மட்டும்.
இந்த திட்டத்தை பெறுவதற்கான நிபந்தனைகள்
- பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- குடும்பத்தில் வேறு பட்டைய அல்லது பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது.
திட்டத்தின் பயன்கள்.- சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்ப பெற இயலாத கட்டணம் - அரசு கல்வி நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளவாறு முழுமையாக ஈடு செய்யப்படுகிறது.
- புத்தக கட்டணம் - கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு ஈடு செய்யப்படும்.
- விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உண்டி உறையுள் கட்டணம் - கல்வி நிறுவனங்களுடன் இணைந்து உள்ள விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கு மாதம் ரூபாய் 175 வீதம் 10 மாதங்களுக்கு இந்த உண்டி உரையில் கட்டணம் வழங்கப்படுகிறது.
- பட்டயப்படிப்பு - ரூபாய் 225 வீதம் ஆண்டிற்கு 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது
- தொழில் படிப்பு - மாதம் ஒன்றுக்கு ரூபாய் 350 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
முக்கிய குறிப்பு மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்கள் கல்லூரிகளில் கிடைக்கும் அல்லது கீழே உள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்
ஆகியவை அடிப்படையாக தேவை. மேலும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களைப் பொறுத்து கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம்.
மேலும் இது குறித்த சந்தேகங்களுக்கு மற்றும் விண்ணப்ப படிவங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள லிங்கில் காணலாம்..
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும். Click Here to Home Menu.
மிகவும் அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவு
ReplyDelete