Posted by
Makkal eSevai
on
- Get link
- Other Apps
தமிழக அரசு சிறுபான்மையினரின் தொழில் உதவிக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பாக மாவட்டம்தோறும் சிறுபான்மையினருக்கு சிறப்பு கடனுதவி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்தத் திட்டம் முழுமையும் சிறுபான்மையினரை பொருளாதார வளர்ச்சிக்காக கடனுதவி வழங்கும் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற தேவையான ஆவணங்கள்
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்று
2. சாதிச் சான்றிதழ் நகல்
3.வருமானச் சான்றிதழ் நகல்
4. இருப்பிடச் சான்றிதழ் நகல்
5. தொழில் செய்வதற்கான திட்ட அறிக்கை
குறிப்பு நீங்கள் முதலீடு செய்ய தேவைப்படும் கடன் தொகையில் 5 சதவீதம் உங்கள் பங்கு தொகையாக செலுத்த வேண்டும்
ஆகியவற்றை இணைத்து கீழே உள்ள லிங்கில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலம் இந்த விண்ணப்பத்தை கொடுத்து பயன் பெறவும்.
உங்கள் ஆவணங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு உங்கள் திட்டங்கள் திட்ட அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் வங்கிகள் மூலம் உங்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
இதனால் சிறுபான்மையினரின் குடும்பம் மற்றும் பொருளாதாரம் வளம் பெறும்.
மேலும் ஜாதிச் சான்று வருமானச் சான்று இருப்பிடச் சான்று போன்ற வருவாய்த்துறையின் சான்றிதழ்களை ஆன்லைனில் விண்ணப்பித்து தொடர்பான காணொளியை கீழே உள்ள யூடியூப் சேனலில் பார்த்து நீங்களே வீட்டிலிருந்து விண்ணப்பிக்கலாம்
For More Services 👈👈👈👈
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்
Comments
Post a Comment