Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே...
அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் என்ற வழிமுறையை அரசு அறிவித்துள்ளது இருந்தபோதிலும்.. தற்போது மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்லலாமா வேண்டாமா இதற்கு வழிமுறை என்ன என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது..
இ பாஸ் பாஸ் பாஸ்... ePasssssssss....
என்ற திட்டம் சென்ற ஆண்டு தமிழக அரசு தொழில்நுட்ப பிரிவு மின் ஆளுமை முகமை அலுவலகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. website: tnepass.tnega.org
முதற்கட்டமாக அத்தியாவசிய தேவைகளுக்கான பாஸ், அதைத்தொடர்ந்து தொழில் துறையினருக்கான பாஸ், அடுத்தது ரயிலில் பயணம் செய்வதற்கான பாஸ் மற்றும் விமானங்களில் வருபவர்களுக்கு இபாஸ் என்று பல்வேறு பிரிவுகளில் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைக்கான பாஸ் இரண்டு மணி நேரத்துக்குள் வழங்கப்பட வேண்டுமென்று அரசு அறிவித்தது அதனைத்தொடர்ந்து..பிறகு அதை மேலும் மெருகூட்டி ஆட்டோ அப்ரூவல் முறையைப் பின்பற்றி விண்ணப்பத்த உடன் அனைவருக்கும் இபாஸ் வழங்கப்படும் என்ற நடைமுறையும் செயல்பாட்டுக்கு வந்தது.
பின்பு இ பாஸ் இணையத்தளமானது மாற்றப்பட்டு eregister.tnega.org என்ற மாற்றப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் வெளிமாநிலங்களில் வருபவர்களும் விண்ணப்பித்து உடன் இபாஸ் பெற்று தமிழகத்திற்குள் வரலாம் என்ற நடைமுறை தற்போதும் இருந்து வருகிறது..
ஆனால் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அறிக்கையில் வெளி நாட்டவரும் வெளி மாநிலத்தவரும் வருவதற்காக கட்டாயம் இ-பாஸ் என தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் பல்வேறு தேவைகளுக்காக அதாவது உணவு ,தொழில் மருத்துவம் மற்றும் இறப்பு ஆகிய காரியங்களுக்கு செல்ல தேவை அல்லது தேவை இல்லையா ? என்ற சந்தேகம் தமிழக மக்கள் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.!!
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், திருமணங்களுக்கும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பயணத்தை மேற்கொள்ளும் அவசியமா என்ற கேள்வி உள்ளது.?
அத்தியாவசிய தொழில்நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவிப்பு இருந்தாலும் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வந்து செல்வதற்கும் அல்லது அருகில் இருக்கும் மாவட்டங்களிலிருந்து தங்கள் இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்கும் அல்லது வந்து செல்வதற்கு வேண்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது..
திருமணங்கள் நடத்துவதற்கு இ பாஸ் வேண்டுமா?
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் வேண்டுமா?
இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல பயணம் செய்ய பாஸ் வேண்டுமா?
எப்பொழுது இந்த பாஸ் நடைமுறைக்கு வரும்..?
என்ற கேள்விகள் மக்கள் மனதில் ஏராளம் உள்ளன..
ஆனால் இதுவரை அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் இதற்கான எந்த தெளிவான பதிலையும் வழங்கவில்லை...
இதனால் வெளியில் செல்ல மக்கள் பலர் எப்படி செல்வது என்று தெரியாமல் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளனர்..
சென்ற ஆண்டு இ பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்ட போது பல இடைத்தரகர்கள் உள்புகுந்து அதை விற்பனை செய்ததாக பல புகார்கள் எழுந்ததால் நாமறிவோம்.
இந்த வருடம் இந்த இ-பாஸ் நடைமுறையை பின்பற்றலாமா அல்லது வேறு ஏதும் மாற்று வழி உள்ளதா என்ற உங்கள் கருத்துக்களையும் இதில் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்தவும்..
How to Apply ePass Here...Click on Me...
ePass Link Click Here... website: eregister.tenega.org.
உயிரிழப்புக்களை தவிர்க்கவும் படுக்கை வசதி உள்ள மருத்துவமனைகளை கண்டறிந்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசின் தொழில்நுட்ப பிரிவு தனியாக ஒரு இணைய தளத்தை உருவாக்கி அதன் மூலம் மக்கள் படுக்கை வசதிகளை மற்றும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இதோ உங்களுக்கான லிங்க்.. Click on me..
E-pass system வேண்டும் சார்.. அதேசமயம் auto approved முறையை தொடர்ந்து பயன்பாட்டில் வைக்கலாம். காரணம் இதன் மூலம் பாஸ் பதிவு செய்வதின் மூலம் இடைத்தரகர் கொள்ளை தவிர்க்கப்படும். மேலும் மக்களே தன்னிச்சையாக அவர்கள் ஆன்ட்ராய்டு போனில் பதிவு செய்ய ஏதுவாக இருக்கும். அதுபோக paper less முறையில் கட்டாயம் பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என்பதில் தளர்வு தேவை... அதேசமயம் வண்டி எண் பதிவு செய்து பாஸ் விண்ணப்பம் செய்தால் அதே வண்டி கட்டாயம் 7 நாட்களுக்கு மீண்டும் பாஸ் விண்ணப்பம் செய்ய கூடாதவாறு மேனிட்டரிங் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் ஒரு வாகன ஓட்டுநர் கட்டாயம் ஏழு நாட்கள் தனிமை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் ஓட்டுநருக்கு தனிமையில் இருக்க வாய்ப்பு அமையும்
ReplyDeleteநன்றி