Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை கற்பிப்பு கட்டணம், சிறப்புக்கட்டணம், தேர்வுக்கட்டணம் மற்றும் கட்டாய கட்டணங்களுக்காக வழங்கப்படும். மாணவர்கள் செலுத்திய கட்டணம் அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
மாணவர்கள் இந்த இணையதளம் மூலம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் விண்ணப்பங்களை பரிந்துரை செய்து வருகிற மாதம் 30-ந்தேதிக்குள் புதுப்பித்தல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய விண்ணப்பங்களை அக்டோபர் 31-ந்தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மாணவர்கள்:
ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,
எழிலகம் இணைப்பு கட்டிடம், சேப்பாக்கம், சென்னை-05
Email: tngovtiitscholarship@gmail.com
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு மாணவர்கள்:
ஆணையர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம்,
எழிலகம் இணைப்பு கட்டிடம், சேப்பாக்கம், சென்னை-05
Email: mbcdnciitscholarship@gmail.com
Comments
Post a Comment