குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன்
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன்
தகுதி (Eligibility)
- 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை எந்தவித பணிக்கும் அமர்த்தக் கூடாது.
- 15 முதல் 18 வயதுக்குள் உள்ளவர்களை அபாயமற்ற பணிகளில் மட்டும் அமர்த்தலாம்.
- அதற்கான அறிவிப்பு தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை துறைக்கு அளிக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
- தொழிலாளர்கள் நலனுக்காக மருத்துவம், குடிநீர், ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் நடைமுறைகள் (Application Mode)
- வணிக நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை தவறாமல் https://www.lwb.tn.gov.in இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.
- வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை www.labour.tn.gov.in/ism இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- அனைத்து நிறுவனங்களிலும் பெயர்ப்பலகை தமிழில் அமைக்க வேண்டும்.
- தினமும் ஒரு திருக்குறள் விளக்கத்துடன் நிறுவனங்களில் காட்சிப்படுத்த வேண்டும்.
- தகவல் பலகையில் தொழிலாளர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
- தொழிலாளர் விவரங்களை eshram.gov.in தளத்தில் பதிவு செய்யலாம்.
புகார் தெரிவிக்கும் வழிகள்
- குழந்தை தொழிலாளர்: Pencil Portal, தொலைபேசி எண்: 1098
- கொத்தடிமை தொழிலாளர்: 1800 4252 650
- வெளிமாநில தொழிலாளர்கள்: 1077
- சட்ட பராமரிப்பு குற்றச்சாட்டுகள்: 1915
- தொழிலாளர் துறை இணையதளம்: www.labour.tn.gov.in
குறிப்பு: கடந்த ஜூன் மாதம் திருப்பூரில் 1 குழந்தை தொழிலாளர் மற்றும் 1 வளரிளம் பருவ தொழிலாளர் மீட்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்து ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்பட்டு அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் உள்ள தகவல்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் விவரங்களுக்கு துறை இணையதளத்தை பார்வையிடவும்.
Comments
Post a Comment