Total Views

Latest News

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் வேலை வாய்ப்பு - Job opportunity in the Ancient Tamil Etymology Agaramathi Project

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் வேலை வாய்ப்பு

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் வேலை வாய்ப்பு

தகுதி (Eligibility)

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் பின்வரும் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன:

  • அலுவலக உதவியாளர் (Office Assistant) – நிலை 1, சம்பளம்: ₹15,700 - ₹50,000
    கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு (VIII Std.) தேர்ச்சி
    இனச் சுழற்சி: ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (SCA - Priority)
  • தொகுப்பாளர் (Compiler) – நிலை 15, சம்பளம்: ₹36,200 - ₹1,14,800
    கல்வித் தகுதி: தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (M.A. Tamil Literature)
    இனச் சுழற்சி: ஆதிதிராவிடர் முன்னுரிமைப் பெற்றவர் (SC - Priority)

அதிகபட்ச வயது வரம்பு: 01.07.2025 நிலவரப்படி 37 வயது. தமிழக அரசின் நடைமுறையின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்ப முறை (Application Mode)

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வெள்ளைத்தாளில் கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படத்துடன் தன்விவரக் குறிப்பை எழுத வேண்டும்.

விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டிய விவரங்கள்:

  • பெயர்
  • முகவரி
  • பிறந்த தேதி
  • மதம்
  • இனம்
  • கல்வித் தகுதி
  • முன்னுரிமை கோருவதற்கான சான்று

தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்ப (Self Attested) நகல்களை இணைத்து 16.08.2025 மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சலிலோ அனுப்ப வேண்டும்.

எங்கே அனுப்ப வேண்டும் (From)

முகவரி: இயக்குநர் (முகூபொ),
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்,
நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம்,
எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர்,
சென்னை – 600 028.

மேலும் விவரங்களுக்கு: 044-29520509 (அலுவலக நேரத்தில் மட்டும்)

Disclaimer: இந்த வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் விவரங்களுக்கு மற்றும் புதுப்பிப்புகளுக்கு, தமிழ்நாடு அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பார்த்து செயல்படவும்.

Comments