Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
திருப்பூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மற்றும் புதியதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள் தங்கள் விவரங்களை https://dish.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவு செய்ய வேண்டியவர்கள்:
தொழிற்சாலை உரிம விண்ணப்பம், உரிமம் புதுப்பித்தல், வரைபட ஒப்புதல், ஆண்டறிக்கைகள், ஒப்பந்த தொழிலாளர் பதிவு, வெளிமாநில தொழிலாளர்கள் பதிவு, அழுத்தக்கலன் சோதனை சான்று, மருத்துவ பரிசோதனை சான்று போன்ற அனைத்து சேவைகளுக்கும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை: அனைத்து கட்டணங்களும் இ-செலான் (e-Challan) மூலம் இணையத்தில் செலுத்த வேண்டும். பெயர் மாற்றம், உரிமையாளர் மாற்றம், சான்று திருத்தம் போன்றவற்றுக்கும் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு இணையதளம் மூலமாக ஒப்புதல் வழங்கப்படும்.
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள: இணை இயக்குனர்-1: 0421-2470483 இணை இயக்குனர்-2: 0421-2230688
Comments
Post a Comment