Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
திருப்பூர் மாவட்டத்தில் சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்குடன், ‘கலைஞர் கைவினை திட்டம்’ மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை பிணையில்லா கடன் மற்றும் ரூ.50,000 வரை மானியம் பெற முடியும்.
விண்ணப்பதாரர் குறைந்தது 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
தையல், கட்டிட வேலை, மர வேலைபாடுகள், ஜவுளி அச்சிடுதல், தோல் பொருட்கள், காலணிகள், மீன்வலை, நகை, சிகை அலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், கலை வேலைபாடுகள், பூட்டு, கூடை, கயிறு பாய், மண்பாண்டம், பொம்மைகள், படகு கட்டுதல், துணி தேய்த்தல், சிற்ப வேலை, கற்சிலை, ஓவியம், பழங்குடியினர் இயற்கை சேகரிப்பு, கண்ணாடி வேலை, இசைக்கருவி, உலோகப் பொருட்கள், பாசிமணி, மூங்கில், பிரம்பு, சணல், பனை பொருட்கள் உள்ளிட்ட தொழில்கள்.
தற்போது நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் கலந்து கொண்டு, மாவட்ட தொழில் மையம் அலுவலர்களை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Comments
Post a Comment