சுய வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு
இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
அறிவிப்பு
இளைஞர்கள் சுயவேலை வாய்ப்பு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் சென்னையை தவிர 37 மாவட்டங்களில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் அரியலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பயிற்சி அம்சங்கள்
பயிற்சி மையங்களில் செல்போன் பழுதுநீக்குதல், ஓட்டுனர் உரிமம், வீட்டு உபயோக பொருட்கள் பழுதுநீக்குதல், கான்கிரீட் கொத்தனார், பிளம்பிங், தச்சு, இருசக்கர வாகன பழுதுநீக்குதல், வயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் உள்ளிட்ட 64 வகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தகுதி (Eligibility)
📌 வயது: 18 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்களுக்கே
📌 இடம்: கிராமப்புற இளைஞர்களுக்காக
📌 கல்வித் தகுதி: 8ம் வகுப்பு முதல் ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படும்.
பயிற்சி காலம் (Duration)
🕒 குறைந்தது 10 நாட்கள் முதல் அதிகபட்சம் 45 நாட்கள் வரை பயிற்சி அளிக்கப்படும்.
இலவச வசதிகள் (Free Facilities)
- மதிய உணவு, காலை/மாலை சிற்றுண்டி, தேநீர்
- சீருடை, பாடப்பொருட்கள்
- தொழில்முனைவோராக மாற அடிப்படை தொழில் கருவிகள்
வழங்கப்படும் சிறப்பு பயிற்சிகள் (Entrepreneurial Skills)
✅ தொழில் வாய்ப்புகளை கண்டறிதல்
✅ தொழில் திட்டம் தயாரித்தல்
✅ சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை
✅ தொழில் முனைவோர் பண்புகள் வளர்த்தல்
✅ முன்னணி நிறுவனங்களுக்கு களப்பயணம்
✅ வெற்றிகரமான தொழில்முனைவோரின் நேரடி உரையாடல்கள்
Comments
Post a Comment