Total Views

Latest News

TWAD - Contractor Registration Online - Tamil Nadu

TNPSC New Revised Annual Planner 2024 | புதிய அறிவிப்புகள்

 





TNPSC New Revised Annual Planner 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி ஆனது 2024 ஆம் ஆண்டிற்குரிய வருடாந்திர தேர்வு அட்டவணையை தற்போது சில மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே காண்போம்.

TNPSC குரூப் 4 தேர்வு:

6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9-ல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்து திருத்தியமைக்கப்பட்ட புதிய ஆண்டு திட்ட அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. குரூப் 1 குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான தேதிகள்:

29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். குரூப்-1 90 பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் அறிவித்துள்ளது. 2,030 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

105 பணியிடங்களுக்கான தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (பட்டப்படிப்பு தரம்) ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெறும். 730 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு டிப்ளமோ / ஐடிஐ நிலைக்கு நவம்பர் 11ஆம் தேதி தேர்வு நடைபெறும். 50 பணியிடங்களுக்கான உதவி அரசு வழக்கறிஞர்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதி தேர்வு நடைபெறும்.

வருடாந்திர தேர்வு அட்டவணை மாற்றம்:

டிஎன்பிஎஸ்சியில் நடைபெறும் அனைத்து தேர்வுகளுக்கு தமிழ் தகுதி தேர்வு கட்டாயம். அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடப்பாண்டில் சுமார் 10,000 பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டமிடல் தற்காலிகமானது மற்றும் தேர்வர்கள் தங்களைத் தேர்வுக்குத் தயார்படுத்திக்கொள்ள இது வெளியிடப்பட்டுள்ளது.

பிளானரில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளில் சேர்த்தல் அல்லது நீக்குதல் இருக்கலாம். சுட்டிக்காட்டப்பட்ட காலியிடங்கள் தேர்வுக்கு முன் அல்லது பின் மாற்றத்திற்கு பொறுப்பாகும். பாடத்திட்டம் ஆணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in இல் கிடைக்கிறது, இது தேதி வரை மாற்றத்திற்கு உட்பட்டது.


சேவையை பெற - 915-0003-008 

வாட்ஸ் ஆப்-ல் - இணைய - WhatsApp Group

Comments