புதிய கட்டுபாடுகளுடன் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் - 2009
Right to Education (RTE) Act, 2009
தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் சேர்க்க இன்று முதல் விண்ணப்பம்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி இன்று முதல் மே 20ம் தேதி வரை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - தனியார் பள்ளிகள் இயக்குநர்.
ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 ம் தேதி முதல், 2021 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 2019 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார வள மைய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மே 28ம் தேதி குலுக்கல் நடத்தி குழந்தைகள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசால் ரூ.400 கோடி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
TN RTE AdmissionEligibility Criteria
The applicant must be a permanent resident of Tamil Nadu
All the children of parents falling under the economically weaker section, disadvantaged group, disadvantaged group special category can apply under this scheme
Preference will be given to disabled children, wards of scavengers and HIV infected
The annual income of the family must not exceed Rs 2 lakh
For admission in LKG, the date of birth of the child must be between 31st July 2017 to 31st July 2018
For admission in 1st standard, the date of birth of the child must be between 31st July 2015 to 31st July 2016
Applicants from BC-others, MBC, ST, SC-others, SC-arunthathiyar, OC, DNC (Denotified communities), a social category not disclosed are eligible to apply
வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அரசு பள்ளி இருந்தால் அந்த மாணவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை எனவும்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் இந்த சட்டத்தின் கீழ் மாணவர் செயற்குழுக்கான அதிக அளவுத் தொகையை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை கட்டுப்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை அது அதிரடியாக முடிவெடுத்துள்ளதாக தகவல்
பள்ளிக்கு அருகில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அதில் 25 சதவீதம் பூர்த்தி ஆகவில்லை எனில் அதற்கு மேற்பட்ட தொலைவில் உள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்
பள்ளிக்கு அருகில் குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளாக இருக்கும் விண்ணப்பங்கள் 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
Comments
Post a Comment