Total Views

Latest News

How to EDIT CAN Number in TN eSevai Portal

How to EDIT CAN Number in TN eSevai Portal 





CAN நம்பர் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்...

அத சொல்லுக முதலில்...

What is CAN Number?

CAN - Citizen Acknowledgement Number

குடிமக்கள் கணக்கு எண் - குகஎ

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் தமிழக அரசு வழங்கும் வருவாய்த்துறை மற்றும் சமூக நலத் துறை சார்ந்த சேவைகளை எளிய வழியில் இணைய வழியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன..


சரி...


வருவாய்த்துறையின் கீழ் வழங்கப்படும் 21 ஆன்லைன் சேவைகளை விண்ணப்பிக்க நாம் அரசு இ சேவை மையங்கள் அல்லது பொது மக்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ள இணையதளத்தின் வழியாக ( www.tnesevai.tn.gov.in ) தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களை இணைத்து பின் இணைய வழியில் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் மற்றும் துணை வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு இனியவளையில் சென்று உரிய நாட்களில் உரிய நேரத்தில் நாம் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது.

ஓகே...


CAN நம்பரில் நீங்கள் பதிவு செய்யும் தகவல்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் தமிழில் இரு மொழிகளிலும் பதிவு செய்யப்பட வேண்டும் ஏனெனில் சான்றிதழ் அனைத்தும் இரு மொழிகளிலேயே உங்களுக்கு வருவாய் துறையால் வழங்கப்படுகிறது ஆகவே பொதுமக்கள் அல்லது அரசு இ சேவை பணியாளர்கள் விண்ணப்பதாரரின் விவரங்களை பதிவு செய்யும் போது மிகவும் கவனமாக பதிவு செய்ய வேண்டும்..

அட.. ஆமாப்பா... சர்ட்டிபிகேட் ரெண்டு மொழிலயு இருக்கு...


விண்ணப்பிக்கும் போது நமது தரவுகளை அடிப்படையாக பதிவு செய்து அதாவது
  • ஆதார்
  • பெயர்
  • பிறந்த தேதி
  • தந்தை பெயர்
  • தாய் பெயர்
  • முகவரி
  • போன் நம்பர் மற்றும்
  • மின்னஞ்சல்
ஆகிய விபரங்களை அடிப்படையாகக் கொண்டு 13 இலக்கத்தில் கிடைக்கப்பெறும் குடிமக்கள் கணக்கு எண் அதாவது CAN நம்பரை வைத்து நமக்கான சேவைகளை எளிதில் விண்ணப்பிக்க பயனுள்ளதாக இருக்கும்...


இந்த CAN நம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே நாம் விண்ணப்பிக்கும் சான்றிதழ்களில் வெளிப்படும் ஆகவே இந்த CAN நம்பரில் உள்ள தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான சான்றிதழ்களும் சரியாக அச்சடித்து கொடுக்கப்படும்...

ஓ.. இதுக்குத்தான் கேன் நம்பரா....

இப்பொழுது பிரச்சினை இந்த CAN நம்பரில் உள்ள விவரங்கள் தவறாக உள்ளது என நீங்க நினைத்தால் எவ்வாறு சரி செய்வது?


இப்போதான் பாய்ண்ட்க்கு வரான்...


தற்போது இணையவளியில் இந்த CAN நம்பரில் உள்ள பதிவுகளை மாற்றம் செய்ய எந்த வழியும் தமிழக அரசு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கவில்லை...

அதாவது இந்த CAN நம்பரில் ஏற்படும் பிழைகளை பொதுமக்கள் தாங்களாகவோ அல்லது அரசு இ சேவை மையங்கள் வழியாகவோ இந்த பிழைகளை சரி செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை...

இத சொல்லத்தான்... இவ்ளோ நேரமா...!!!


இதற்கு சரி செய்ய மூன்று வழிகளை நாம் பின்பற்றலாம்...

முதல் வழி ..

தமிழக அரசின் தனி பிரிவின் கீழ் செயல்படும் முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தில் நீங்கள் உங்கள் புகாரை பதிவு செய்யலாம் அல்லது இலவச எண்ணிற்கு (1100) அழைத்து உங்கள் கேன் நம்பரில் உள்ள புகாரை பதிவு செய்யலாம்...


இப்படி செஞ்சா சரியாயிருமா? அது நமக்கு தெரியாது !! இதுவும் ஒரு வலி... அடுத்து இரண்டாம் வழியை சொல்லுப்பா..

இரண்டாம் வழி..

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்திற்கு நீங்க மின்னஞ்சல் அனுப்பலாம்...

அப்படியா என்ன மின்னஞ்சல் tnesevaihelpdesk@gmail.com என்று மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் ..

என்னென்ன வைத்து அனுப்பனும்...?

  • உங்க கேன் நம்பர்
  • என்ன திருத்தம்
  • அதற்கான உரிய ஆவணம்

அப்படி அனுப்புனா சரி பண்ணி கொடுத்துடுவாங்களா ?
எவ்வளவு நாளா சரி பண்ணி கொடுப்பாங்க?

இந்த புகார்களும் மின்னாளுமை முகமை அலுவலகத்தில் இருக்கிற உதவி மையத்தில் அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள மேலாளர்களுக்கு அனுப்பி அதை சரி செய்ய... எவ்வளவு நாள்ல எவ்வளவு நேரத்துல சரியாகும் ? அது தெரியாது !!! அட போப்பா... சரி சொல்லு மூணாவது வழியும் கேட்டுட்டு போறோம்.... மூன்றாவது வழி மற்றும் வலி...

தமிழ்நாடு மின்னலுமை முகமை அலுவலகத்தால் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் மாவட்டம்தோறும் பணியாற்றியவரும் மாவட்ட மின் ஆளுமை மேலாளர்கள் அவர்கள் மட்டுமே இந்த கேன் நம்பரில் உள்ள திருத்தங்களை சரி செய்ய முடியும்...

அப்படியா அது யாருப்பா அவங்க?

eDistrict Manager-1
eDistrict Manager-2


இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து இணையதள சேவைகளையும் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவது அது தொடர்பான பயிற்சிகள் வழங்கியது அதை தொடர்ந்து கண்காணிப்பது போன்ற பல வேலைகளை மாவட்ட அளவில் இந்த மாவட்ட மேலாளர்கள் கண்காணித்து வருகின்றனர்..

ஓ அப்படியா !!! இவ்வளவு நாள் தெரியாம போச்சே !!ஆமாம் !!

அவர்களே நீங்கள் நேரில் சந்தித்தால் அந்த கேன் நம்பருடன் உரிய ஆவணங்களுடன் சந்தித்தால் உடனடியாக செய்து தர வாய்ப்பு உள்ளது... அப்பா.. அவங்க எங்க இருப்பாங்க? எப்படி அவங்கள அணுகுவது? போன் நம்பர் அல்லது மெயில் ஐடி ஏதாவது இருக்குமா இல்ல நேர்ல தான் போய் சந்திக்கணுமா? கேன் நம்பரை பொறுத்தவரை அவர்களின் நேரில் சந்திப்பது தான் நல்லது என்றால் மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் அனுப்ப நீங்கள் அனுப்புவதை அவர்கள் கவனிக்காமல் விட்டுவிடலாம் மேலும் அவர்களுக்கு அலுவலக வேலைகள் அதிகமாக இருக்கலாம் அதனால் அதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது..
சரிப்பா... எங்க போய் சந்திக்கனும்..

வேற எங்க.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான்...

அதுக்கு ஒரு நாள் லீவு போடனுமே....!

நான்காம் வழி ஏதாச்சும்..

அட... மூனுதான் இப்போ...!
சரிப்பா நான் போயி கேன் நம்பரை திருத்திட்டு வர பார்க்கிறேன்..




மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு சென்று கேன் நம்பரை திருத்தியவர்கள் உங்கள் அனுபவத்தினை கீழே பதிவு செய்யவும்..

சான்றிதழில் திருத்தம் செய்வது பற்றி.. அடுத்த பதிவில்...

தகவல் பயன்ண்னுள்ளதாக இருந்தால்.. பகிரவும்...


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...


Comments