Total Views

Latest News

TWAD - Contractor Registration Online - Tamil Nadu

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு | OMBUDSMAN Recruitment in All Districts

 தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு.


Ministry Of Rural Development, Government Of India



தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாவட்டந்தோறும் தகுதியான நபர்களிடமிருந்து தேர்வு செய்யப்படும் அடிப்படையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்புஅறிவித்திருக்கும் துறை: 

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை.


திட்டம்: 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு ஸ்கிம்


வேலையின் பெயர்: Ombudsman ( மக்கள் குறை கேட்கும் அலுவலர்)

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலம்: 

காண்ட்ராக்ட் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள். செயல் திறனை பொறுத்து ஒவ்வொரு ஆண்டும்  காண்ட்ராக்ட் புதுபிக்கப்படும்.


தகுதி.

  1. விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் மக்கள் சேவையில் அல்லது சட்டம் அல்லது கல்வி அல்லது சமூக வேலைகள் அல்லது நிர்வாகம் போன்ற துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  2. மக்களோடும் ஒரு சமுதாயத்தோடு பணியாற்றிய பணி அனுபவம் கண்டிப்பாக வேண்டும்
  3. நல்லதொரு பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  4. அரசியல் சார்ந்த நபராக இருக்கக்கூடாது.
  5. மனநிலை பாதிக்கப்பட்டவராக இருத்தல் கூடாது
  6. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மாவட்டத்திலுள்ள கிராமம் தோறும் பயணிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் விருப்பம் மற்றும் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும்
  7. உங்கள் மீது இது குற்றவியல் அல்லது சிவில் வழக்குகள் இந்தியா முழுவதும் எந்த நீதிமன்றத்திலும் இருத்தல் கூடாது.
  8. பஞ்சாயத்தில் உள்ள 3 Tier (Village Level, Block Level and District Level )களிலும் எந்தவித ஆர்வமோ இல்லாதவராக இருக்க வேண்டும் 
  9. எந்த ஒரு காரணத்திற்காகவும் நீங்கள் தண்டனை அல்லது சட்ட ரீதியாக தண்டனைகளை பெற்றிருக்க கூடாது.


பணி நியமனம்:

OMBUDSMAN அதாவது மக்கள் குறை கேட்கும் அலுவலர் மாநில அரசின் தேர்வுக் கமிட்டியின் பரிந்துரையின் கீழ் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

ஊதியம்:

நீங்கள் ஒரு தடவை அமர்ந்து குறைகளை கேட்டு அதில் தீர்வுகளை கொடுப்பதற்கு அதற்கு கட்டணமாக ரூபாய் ரூ.1000/- வழங்கப்படும் அதிகபட்சமாக நீங்கள் ரூ.20,000/- ஆயிரம் வரை பெறலாம்.

Travel Allowance and Dearness Allowance  முதல் வகுப்பு அலுவலர்களை போல இதற்கும் அது பொருந்தும்.




பணி நீக்கம்.

செயல்திறன் சரியில்லாத போது அல்லது திருப்திகரமாக இல்லாத போது மாநில அளவிலான குழு பரிந்துரையின் அடிப்படையில் பணி நீக்கம் உடனே செய்யப்படுவார்.


பணியிடம்

தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் மாநில அளவிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்.


விண்ணப்பிக்க கடைசி நாள் 31 8 2021


Application: Click me

Advertisement : Click Me

Annexure: Click Me

Department Website : Click Me

For More Online Services visit www.esevaisupport.com Click me to open



விண்ணப்பங்க அனுப்ப வேண்டிய முகவரி

Directorate of Rural Development and Panchayat Raj,
Saidapet,
Panagal Maligai,
Chennai - 15.



✅தமிழக அரசின் புதிய இணையவழி சேவை.

✅உங்களது வீடு அல்லது நிலத்தின் பட்டா இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி

Share this link 🖇Click to View Patta


மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள லிங்கில் காண
லாம்..


Online Services.. Click Here..👈👈


இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் இதை மற்றவர்களுக்கும் பகிரலாம்


இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.     

Click Here to Home Menu.



Comments