முதலமைச்சர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடக்கம்.
தமிழக முதலமைச்சர் பொதுமக்களிடம் புகாரை பெறுவதற்கு இணையதளம் வாயிலாக தனி இணைய தளத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கான குறைகளை முதலமைச்சரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உங்கள் குறைகளை கோரிக்கைகளை பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை Click செய்தவுடன் உங்களுக்கான முகப்பு பக்கம் வலை தளம் ஓபன் ஆகும்
இரண்டாவதாக உங்களுக்கான Username and Password இருந்தால் நேரடியாக உள்ளே நுழையலாம் அல்லது New User என்ற பட்டனை கிளிக் செய்யவும்
உங்களுக்கான User name and Password கிரியேட் செய்ய உங்கள் பெயர், முகவரி, மாவட்டம் ,உங்களது பிறந்த தேதி, உங்களது பாலினம் ,வீட்டு முகவரி, மாவட்டம், வட்டம் ,வருவாய் கிராமம், மற்றும் உங்கள் மின்னஞ்சல், தொலைபேசி, எண்ணை கொடுத்து உங்களுக்கான Username and Password உருவாக்கிக் கொள்ளலாம்.
நீங்கள் சமித் கொடுத்தவுடன் உங்களுக்கான Username உங்கள் மின்னஞ்சல் ஆகவும் Password அதில் உருவாகுவதை நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
அடுத்தபடியாக மீண்டும் Login கிளிக் செய்து உங்களுக்கான சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களது Password உள்ளே செலுத்தி உங்களுக்கான குறை வகையைத் தேர்வு செய்ய வேண்டும்.
பின் நீங்கள் தேர்ந்தெடுத்த குறை வகையை பொருட்டு உங்களுக்கான குறையை நீங்கள் அதில் நான்காயிரம் எழுத்துக்கள் (4000 Letters) வரை பதிவு செய்யலாம்
ஒரு ஆண்டிற்கு 50 குறைகள் வீதம் இதில் பதிவு செய்யும் வசதி உள்ளது.
நீங்கள் பதிவு செய்து முடித்தபின் Submit என்று பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கான குறைகள் தனிப்பிரிவு அனுப்பப்பட்டு அதற்கான ஒப்புகைச் சீட்டை நீங்கள் பதிவிறக்கம் அல்லது Print Out எடுத்து வைத்துக்கொள்ளலாம்
உங்கள் மனுவின் நிலையை அறிய Track your Grievance என்ற Option மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்தவும்.
இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் இதை மற்றவர்களுக்கும் பகிரலாம்
உங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்வதற்கான இணையதளம் இதோ
http://cmcell.tn.gov.in/ Click Me
Comments
Post a Comment