Total Views

Latest News

TWAD - Contractor Registration Online - Tamil Nadu

வந்தாச்சு டிஜிட்டல் வாக்காளர் அட்டை... Get Your Digital Voter ID Card.

இனி டிஜிட்டல் வாக்காளர் அட்டை

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது..


வாக்காளர் பட்டியல் பல்வேறு மாநிலங்களில் அதிலும் சிறப்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதிய வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே..

கொரோனா பரவலை கருத்தில் கொண்டும் தேர்தலை நடத்த, ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே என்ற நடைமுறையை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இதற்கான பல்வேறு ஆலோசனைகளை மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தேர்தல் ஆணையம் பல வழிமுறைகளை வழங்கி வருகிறது. 

இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே பெயர் சேர்த்தல் பெயர் நீக்கல் முகவரி மாற்றம் சட்டமன்ற தொகுதி மாற்றம் போன்ற மாற்றங்களை ஆன்லைனில் செய்ய வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் கொராணா பரவலை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் புதிய முயற்சியாக மின்னணு முறையில் டிஜிட்டல் வாக்காளர் அட்டை வெளியிட முடிவு செய்துள்ளது. 

இந்த கொரோனா காலத்தில் இந்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் மக்களின் பல்வேறு சேவைகளை எளிய முறையில் எடுத்துக் கொள்ள மின்னணு முறையிலும் ஆன்லைன் முறையிலும் மாற்றி உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே..

எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டில் கொரானா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் இ-பாஸ் முறை நடைமுறைப் படுத்தப்பட்டு , பொதுமக்கள் அனைவரும் எளிமையாக தங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைத்து அந்த சேவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தேசிய வாக்காளர் தினம்.

இந்த டிஜிட்டல் மின்னணு முறையிலான வாக்காளர் அடையாள அட்டை சேவை தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்த வாக்காளர்களுக்கு இந்த சேவை முதலில் அறிமுக சேவையாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய வாக்காளர்களுக்கு பிப்ரவரி 1 முதல் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பயன்படுத்தும் முறை

இந்த மின்னணு முறையிலான டிஜிட்டல் வாக்காளர் அட்டை , வாக்காளர்  பட்டியலுடன் இணைத்து உள்ள அலைபேசி என்னுடன் லாகின் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இதன் அமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் வாக்காளர் அட்டை

இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையில் , 
வாக்காளரின் புகைப்படம் வாக்காளரின் பெயர் 
பாகம் எண்,
வரிசை எண்,
க்யூ ஆர் கோட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 இந்த புதிய சேவை பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மாற்றம் போன்ற சேவைகளை எளிய முறையில் எவ்வாறு பெறுவது என்ற உங்கள் சந்தேகங்களை கீழே உள்ள காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பதிவை பயனுள்ளதாக நீங்கள் உணர்ந்தால் இதை பலருக்கு பகிர்ந்து இந்த செய்தியை தெரியப்படுத்தவும்.

மீண்டும் புதிய தகவல்களுடன் அடுத்த பதிவில்...

Comments