Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
தமிழக அரசு இந்தத் திட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் துறையினால் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
இதுவும் முற்றிலும் இலவசமான திட்டம் மற்றும் எளிய முறையில் மக்கள் பெரும் வகையில் இந்தத் திட்டத்தின் அமைப்பு உள்ளது.
பயனாளிகள்
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம்.
வயது வரம்பு
18 முதல் 45 வரை உட்பட்ட ஆண் பெண் ஆகியோருக்கு இந்த திட்டம் பொருந்தும்.
கல்வித்தகுதி.
கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை
சிறப்புத் தகுதி
இந்தத் தையல் இயந்திரத்தை பெறுவதற்கு முறையான தையல் பயிற்சி கற்று கொண்டதற்கான சான்று அரசு நிறுவனங்களிடமிருந்து அல்லது தனியார் பயிற்சி நிறுவனங்களும் இருந்தும் பெற வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
1. வருமானச் சான்று 72 000க்குள் இருக்க வேண்டும்
2. இருப்பிடச் சான்று
3. ஜாதி சான்று
4. பாஸ்போர்ட் சைஸ் இரண்டு புகைப்படங்கள்
5. ஆதார் அட்டை நகல்
6. தையல் கற்றுக் கொண்டதற்கான சான்றிதழ்
7. ஆகிய ஆவணங்களுடன் ஒரு கடிதத்தில் அனுப்புனர் உங்கள் முகவரி பெறுநர் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் என்ற பெருநர் முகவரிக்கு கடிதம் எழுதி தபால் அல்லது நேரில் சென்று உரிய அலுவலரிடம் இதை கொடுக்கவும்.
உங்களது ஆவணங்கள் பரிசீலினை செய்யப்பட்ட பின்பு மாவட்ட ஆட்சியரால் அல்லது சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளினால் இந்த தையல் இயந்திரத்தை நீங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் ஜாதிச் சான்று வருமானச் சான்று இருப்பிடச் சான்று போன்ற வருவாய்த்துறையின் சான்றிதழ்களை ஆன்லைனில் விண்ணப்பித்து தொடர்பான காணொளியை கீழே உள்ள யூடியூப் சேனலில் பார்த்து நீங்களே வீட்டிலிருந்து விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்
Comments
Post a Comment