Total Views

Latest News

TWAD - Contractor Registration Online - Tamil Nadu

தமிழக அரசின் விலை இல்லா சலைவை பெட்டி பெறுவது எப்படி?


     தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு திட்டங்களில் ஒன்றாக,  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர் களுக்கும் இலவசமாக சலைவைப்பெட்டி வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 😎


இந்தத் திட்டம் சிலருக்கு தெரிந்திருந்தாலும், பலருக்கு இதை எப்படி முறையாக செய்வது என்று தெரிவதில்லை.😔


மேலும் இதில் உள்ள தரகர்கள் போன்றவர்கள் இந்த இலவச திட்டத்திற்கு பணம் வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.😨


இதனால் இந்தத் திட்டத்தின் நோக்கம் மற்றும் பயனாளிகள் வெகுவாக பாதிப்படைகின்றனர்.😢


இந்தத் திட்டத்தை உரிய பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் தமிழக அரசின் மிகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கான் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் தேவையான தகவல்களோடு இந்த பதிவை உங்களுக்காக பதிவு செய்கிறேன்.


திட்ட செயலாக்கம்.

இது தமிழக அரசால் வழங்கப்படும் இலவச திட்டமாகும்.

இந்தத் திட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையினால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பயனாளிகள்

இந்தத் திட்டத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் இதனால் பயன் அடையலாம்.

MBC and DNC Only.


வயது

18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.


தேவையான ஆவணங்கள்

1. குடும்ப வருமான சான்று ரூபாய் 72 000 ஆக இருக்கவேண்டும் 


2. இருப்பிட சான்று


3. ஜாதி சான்று


4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2


5. ஆதார் அட்டை


6. ஒரு வெள்ளைக் காகிதத்தில் அனுப்புனர் உங்கள் முகவரியும் பெறுநர் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் என்ற பெறுநர் முகவரிக்கு மேலே குறிப்பிட்ட ஆவணங்களை இணைத்து இந்த விலை இல்லா இலவச சலைவைப்பெட்டி  வழங்குமாறு  கேட்டுக்கொள்கிறேன் என்ற ஒரு கடிதத்தை உங்கள் மாவட்ட ஆட்சியரிடம் அல்லது துறை அலுவலரிடம் நேரில் சென்றோ அல்லது தபாலில் அனுப்பி வைக்கவும்.


உங்களது ஆவணங்கள் பரிசீலினை செய்யப்பட்ட பின்பு மாவட்ட ஆட்சியரால் அல்லது சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளினால் இந்த தமிழக அரசின் விலை இல்லா சலைவை பெட்டி நீங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்

மேலும் ஜாதிச் சான்று வருமானச் சான்று இருப்பிடச் சான்று போன்ற வருவாய்த்துறையின் சான்றிதழ்களை ஆன்லைனில் விண்ணப்பித்து தொடர்பான காணொளியை கீழே உள்ள யூடியூப் சேனலில் பார்த்து நீங்களே வீட்டிலிருந்து விண்ணப்பிக்கலாம்..

https://www.youtube.com/c/TNeGovernance

இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்



Comments