Total Views

Latest News

TWAD - Contractor Registration Online - Tamil Nadu

eSevai For All in Tamil Nadu


eSevai For All in Tamil Nadu 



அண்ணே !!! நான் ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வச்சிருக்கேன் எப்படித்தான் தொழில் முன்னேற்றது என்றே தெரியவில்லை.!! என்ன பண்ணாலும் நாலு காசு டெய்லி மிச்சமாட்டிங்குது ஏதாவது ஒரு யோசனை சொல்லுங்கண்ணே...😓

 

 ஆன்லைன் சேவைகள் ஏதாவது எடுத்து பண்ணலாமல்ல தம்பி 😐

 

பான் கார்டு, பாஸ்போர்ட், ஈபி பில் கட்டுவது, ஆதார் கார்டு, கலர் பிரிண்ட் அவுட், கலர் ஜெராக்ஸ் இதெல்லாம் எடுத்து கொடுத்துட்டு தானே இருக்கிறேன்... ஆனாலும் நமக்கு தொழில் வருமானம் நினைச்ச மாதிரி அமையவில்லை....

அரசு சேவை மையம் மாதிரி ஏதாவது எடுத்து மக்களுக்கான சேவைகளை வந்து வழங்கலாம்- தம்பி

 

அதுவும் try பண்ணிட்டு தானே இருக்கேன்.. ஓப்பன் போர்ட்டல் மூலமா மக்களுக்கு தேவையான சேவைகளை  செஞ்சுட்டுதான் இருக்கிறேன். இன்னும் கூடுதலா சேவைகள் செய்யணும்னு ஆசைப்படுறேன்...

 

சேவை மையத்துக்கான ஐடி ஏதாவது வாங்கி எல்லா சேவைகளும் பண்ணலாம் இல்ல..

அது எப்படி வாங்குவது என்று தெரியவில்லை!!!

அதுபோக செலவாகும் சொல்றாங்க யாரை நம்பியும் பணம் கொடுக்கவும் பயமா இருக்கு இதுக்கு...

ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் அண்ணா!!

நான் மத்திய அரசாங்கத்தோட Digital India -  ஐடி வச்சிருக்கேன். மத்திய அரசோட சேவைகளை வழங்கிட்டு இருக்கிற நம்ம தமிழக அரசுடைய சேவைகளையும் வழங்குவதற்கு இன்னும் நம்ம கிராமத்துல பொதுமக்களுக்கு சேவைகளை வழங்க இன்னும் வசதியா இருக்கும்...

தம்பி இந்த விஷயம் தெரியாதா உனக்கு மத்திய அரசோட Digital India ஐடி வச்சிருக்கிற உங்களுக்கு தமிழக அரசோட தமிழ்நாடு மின்னாளுமை முகமை சேவைகளை வழங்குவதற்கான தமிழக அரசுடன் சேவை ஐடி வழங்குவதற்கான பேச்சுவார்த்தை ஒன்னு நடந்துட்டு இருக்காமே உனக்கு தெரியுமா??

என்னண்ணே சொல்றீங்க!!!  

கொஞ்சம் விரிவா சொல்லுங்கண்ணே என்ன நடந்துட்டு இருக்குது எல்லாரும் தெரிந்து கொள்வோம் எனக்கு அதை பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.....

 

தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் தமிழ்நாடு மின்னாளுமை முகமை அலுவலகத்தின் வழியாக சுமார் 15,000 அரசு சேவை மையங்கள்  தமிழகத்தில் செயல்பட்டில் இருந்தது. கடந்த மூன்று மாதங்களாக எந்த பரிவர்த்தனையும் செய்யாத அரசு சேவை மையங்கள்  தமிழக அரசு முடக்கம் செஞ்சு இருக்கு...

சுமார் 5500 அரசு சேவை ஐடி-கள் தமிழ்நாடு மின்னாளுமை முகமை அலுவலகம் முடக்கம் செஞ்சுருக்காங்க..  அந்த பொது சேவை மையங்களை நிரந்தரமா நிறுத்தி விடலாம் அப்படின்னு சொல்லி நிறுத்தி இருக்கிறார்கள் தமிழ்நாடு முகமை அலுவலகம்...

அப்படியா !!! 



அண்ணே இதனால் நமக்கு என்னன்னே பயன்???? நமக்கு ஏதும் சாதகமாக இருக்கிற மாதிரி தகவல் இருந்தா சொல்லுங்க அண்ணே???

அட இருக்குப்பா அவசரப்படாம கேளு..

இப்போ தமிழ்நாட்டுல அரசு சேவை மையங்கள் எங்கெங்க செயல்பாட்டில் இருக்கு அப்படிங்கறத கண்டறிவதற்கு ஜியோ டாக்கிங் (GEO TAGGING )பண்ண சொல்லி தமிழ்நாடு மின்னாளுமை முகமை அலுவலகத்தில் இருந்து மாவட்டத்தில் இருக்கிற மின்னாளுமை மேலாளர்களுக்கு அறிவுத்தப்பட்டு அனைத்து அரசு இ சேவை மையங்களும் தாங்கள் எங்கு இருக்கிறார்களோ அந்த இருப்பிடத்தை உறுதி செய்ய ஜியோ டாக்கிங் பண்ணி இருக்காங்க..



அதுபோல அது யாரு இயக்கிட்டு இருக்காங்க.. அந்த இசேவை மையங்களை பத்தின அடிப்படை வசதிகள் குறித்த தகவலை பதிவேற்றம் செய்யணும் அப்படின்னு சொல்லி அனைத்து தகவலையுமே அந்த ஐடி ஓபன் பண்ண உடனே அவங்களுக்கான ஒரு ப்ரோபைல் அப்டேசன்ல (Profile Update)அடிப்படை தகவல்களை அனைத்து அரசு சேவை மையம் மூலம் அதுல பதிவு செஞ்சிருக்காங்க...



இப்போ இந்த ரெண்டு நடவடிக்கையும் நாம வெச்சு பார்க்கும்போது இப்போ அரசு சேவை மையங்கள் தமிழ்நாட்டில் எங்கெங்க இருக்குன்னு தெரிஞ்சாச்சு அதுபோல நமக்கு அங்கு இருக்கிற அடிப்படையான வசதிகளை பற்றிய தகவலும் நமக்கு கிடைச்சாச்சு...



அதனால இப்ப என்ன சொல்ல வர்றீங்க அண்ணே....

இப்போ அடுத்த கட்டமா சேவை ஐடிகள் வந்து அனைவருக்கும் கொடுக்கப் போவதாக தமிழ்நாடு மின்னாளுமை முகமை அலுவலகத்தில் ஒரு திட்டம் இருப்பதாக வெளிவந்திருக்கு தகவல்..

என்னங்கண்ணே நீங்க சொல்றீங்க?? கேக்குற எல்லாருக்கும் கொடுக்க போறாங்களா என்ன சொல்றீங்க இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்கண்ணே....

அட ஆமா தம்பி மத்திய அரசாங்கத்தோட Digital India ID எப்படி ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் கேட்கும் நபருக்கு ஐடி கொடுத்து அந்த சேவைகளை வழங்கினார்களோ அதே போல தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்தோட சேவை ஐடிகளும்...

இனிமேல் ஒவ்வொரு ஊரிலும் கேட்கப்படும் நபர்களுக்கு வழங்குவதாக சொல்லி இருக்காங்க சோ இது வந்து சேவை ஃபார் ஆல் (eSevai For ALL) என்று திட்டத்தின் மூலமா வழங்குவதாக சொல்லி இருக்கிறார்கள்

 

அது எப்படின்னே சாத்தியமாகும்? 

எப்படி கண்காணிப்பார்கள் எப்படி கொடுப்பார்கள்?

 

மத்திய அரசாங்கத்துடன் Digital India ID எப்படி சாத்தியமோ அதே போல இதுவும்...

நாம் விண்ணப்பிக்கும் பொழுது உங்களுக்கான அடிப்படை தகவல்கள் அனைத்தையும் அந்த போர்டலில் அப்டேட் செய்துவிட வேண்டும்.. செஞ்ச பிறகு அதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் நிறுவனம் உங்களுக்கான கள ஆய்வு.... உங்கள் அலுவலகத்திற்கு வந்து உங்களுக்கு அடிப்படை வசதிகள் ஆய்வு செய்த பின்னர் உங்களுக்கான ஐடியை ஆக்டிவேட் செய்து கொடுப்பார்கள்....

இப்பொழுது புரிஞ்சுதா தம்பி சேவை ஐடிகளை நீயும் வெகு விரைவில் பெற்றுக் கொள்ளலாம்...

 

சூப்பர்... சூப்பர்... அண்ணே அருமையான தகவல் அண்ணே இப்ப நான் செய்ய வேண்டியது என்னங்கண்ணெ...

 

பண்ண வேண்டியது எல்லாம் ஒன்னே ஒன்னு தான் இந்த Blog-ஐ Subscribe பண்ணி வச்சுக்கோ உனக்கு தேவையான தகவல்களை உடனடியாக இதன் மூலம் தெரிஞ்சுக்கலாம்....

 

உடனே பன்னீரன்...

 

நீங்களும் பண்ணலாமே ஒரு சின்ன Subscribe..

 


Comments