Total Views

Latest News

TWAD - Contractor Registration Online - Tamil Nadu

*முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத் திட்டம்!!!*

முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத் திட்டம்!!!

சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத் திட்டத்தின் கீழ் 

  • இறப்பிற்கு  - ரூ.1,00,000/- 
  • சிரிய காயங்களுக்கு - ரூ.10,000/- 
  • பெரிய காயங்களுக்கு - ரூ.50,000/- 

வரை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால் நிவாரணம் வழங்கப்படுகிறது.

👉இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற விபத்து ஏற்பட்டவுடன சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் 


  • இறப்புச்சான்று / காயச்சான்று
  • வாரிசுசான்று
  • ஆதார் அட்டை மற்றும் 
  • புகைப்படம்
  • விண்ணப்பப் படிவம்

ஆகியவற்றினை சமர்ப்பித்து விண்ணப்பப் படிவத்தினை பூா்த்தி செய்து வழங்க வேண்டும். 




👉மேற்படி காவல் நிலைய காவல் ஆய்வாளா் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் பரிந்துரையுடன்  மேற்குறிப்பிட்ட விண்ணப்பமானது வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டு முதுநிலையின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியரால் நிவாரண நிதியுதவி வழங்கப்படும்.


 👉இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்ப படிவத்தினை எளிமைப்படுத்தும் விதமாக புதிய விண்ணப்படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

👉இதனை அனைத்து காவல்நிலையங்களிலும் விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை அவர்களிடமிருந்து பெற்று சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களுக்கு பரிந்துரைக்குமாறு காவல் ஆய்வாளா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


👉இத்திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவிலான விளம்பர பதாகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்து காவல் நிலையங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்கள்மற்றும் அனைத்து மருத்துவமனைகள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்கப்படும்.


  • இறப்புச் சான்று விண்ணபிக்க மற்றும் பதிவிறக்கம் செய்ய.. Click Here
  • வாரிசு சான்று விண்ணப்பிக்க பதிவிறக்கம் செய்ய. Click Here
  • ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்ய.. Click Here
  • விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய Click Here

மேலும் ஆன்லைன் செய்திகள் / சேவைகள் தொடர்பான ஆலோசனைகளுக்கு மற்றும் மேலே உள்ள பணிக்கான விண்ணப்பங்கள் விண்ணப்பித்து தரப்படும் தொடர்புக்கு  வாட்ஸ்அப் செய்யவும் - 915 0003 008 WhatsApp


மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள லிங்கில் காணலாம்..


Online Services.. Click Here..👈👈


இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் இதை மற்றவர்களுக்கும் பகிரலாம்


இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.     

Click Here to Home Menu.


For more details and visit www.esevaisupport.com







Comments